பாடசாலை

Southend Tamil School was established on 25.09.2010 by the Southend Tamil Association. The primary focus of the school is to deliver classes in Tamil language and Fine Arts subjects in three stages according to the national school calendar.

About the School

சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடமானது, சௌத்தென்ட் தமிழ்ச்  சங்கத்தினால் 25.09.2010 அன்று ஆரம்பிக்கப்பட்டு தமிழ் மொழி மற்றும் நுண்கலைப்பாடங்கள்  தேசிய பாடசாலை கால அட்டவணைக்கேற்ப மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு  வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. அத்துடன் சகல மாணவர்களும் விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற  எம்மால் ஊக்குவிக்கப்படுகின்றனர். சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தின் சேவையானது முற்றிலும் தன்னார்வ தொண்டர்களால் நடாத்தப்படுகின்றது.

புதிய தொண்டர்களின் உதவியும் ஆற்றலும் எப்பொழுதும் இக்கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்றது. தொண்டராசிரியராக இணைய விரும்புவோருக்கு மட்டும் குறிப்பிட்ட  சில அடிப்படைத் தகமைகள்  எதிர்பார்க்கப்படுகின்றன.

From the Headteacher

சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்திற்கு உங்கள் அனைவரையும் பெருமையுடன் வரவேற்பதில் உவகையடைகின்றேன். மாணவர்களுக்கு சிறந்த ஓர் கல்விச் சூழலை அமைத்துக் கொடுப்பதே எங்கள் முக்கிய நோக்கமாக அமைகின்றது. பெற்றோர்கள் தமது  பிள்ளைகளின் முன்னேற்றத்தை பற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் உரையாடும் படி ஊக்குவிப்பதுடன் ஆசிரியர்கள் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

  • பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் தவறாது சரியான நேரத்திற்கு பாடசாலைக்கு சமுகமளிப்பதை உறுதி செய்யுங்கள்.
  • பாடசாலை ஒழுக்கத்தை கடைபிடிக்க ஒத்துழைக்குமாறு வேண்டி நிற்கிறேன்.
  • உங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியை கற்பதற்கு ஒத்தாசையாக இருப்பதுடன் பாடசாலையில் என்ன படித்தீர்கள் என வினவி அவர்களை மென்மேலும் சிறப்பாக கற்பதற்கு தமிழில் உரையாடி உற்சாகப்படுத்துங்கள்.
  • பாடசாலை சம்பந்தமான அல்லது அதற்கு புறம்பான சம்பவங்கள் பிள்ளைகளின்  கல்வியை பாதிக்கின்றது என நீங்கள் கருதினால், உடன் எமக்கு  தெரியப்படுத்துங்கள்.

பிள்ளையின் முன்னேற்றத்தைப்பற்றி வகுப்பாசிரியருடன் கலந்துரையாடுவதுடன்  தவறாது பெற்றோர் ஆசிரிய சங்க கூட்டங்களில் பங்கெடுங்கள். மேலதிக கேள்விகள் இருப்பின் மின்னஞ்சல் மூலமக உடன் தெரியப்படுத்துங்கள்.

பிள்ளையின் முன்னேற்றத்தைப்பற்றி வகுப்பாசிரியருடன் கலந்துரையாடுவதுடன்  தவறாது பெற்றோர் ஆசிரிய சங்க கூட்டங்களில் பங்கெடுங்கள். மேலதிக கேள்விகள் இருப்பின் மின்னஞ்சல் மூலமக உடன் தெரியப்படுத்துங்கள்.

Activities of STA

Feedback and Suggestions

உங்கள் அனைவரிடமிருந்தும் ஆக்கபூர்வமான கருத்துக்களும் பரிந்துரைகளும்  எதிர்பார்க்கப்படுகின்றன. நீங்கள் தெரியப்படுத்தும் பாராட்டுக்கள் நிச்சயமாக அவரவர்களைச் சென்றடையும். அதேபோல்  நீங்கள் தெரியப்படுத்தும் கருத்துக்களோ குறைகளோ ஒருபோதும் உங்கள் பிள்ளைகளின் கல்வியை எந்த வகையிலும் பாதிக்காது. ஏதாவது முக்கிய விடயம் பற்றி நீங்கள் நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துவர விரும்பினால் அதை அதற்கு பொறுப்பானவரிடம்  உடன் தெரியப்படுத்துங்கள். அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். அத்தீர்மானம் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் உடன் கல்விக்கூட தலைமை ஆசிரியர்  அல்லது ஒழுங்காற்றுக்குழுவிற்கு பொறுப்பான திரு. தயாபரனுடன்  தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அது உடன் பதியப்பட்டு அடுத்த பாடசாலை தினத்திற்கு முன் தீர்வு காண்பதற்கு முழு முயற்சி எடுக்கப்படும். உரிய தீர்வு காணப்படாத தருணத்தில்  அதற்கான காரணம் அல்லது  விளக்கம் உங்களுக்கு தரப்படும்.